முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒமைக்ரான் மற்றும் கொரோனா நீங்க வேண்டியும், கொரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என்றும் மீனாட்சி அம்மனை குடும்பத்தோடு தரிசனம் செய்தோம்.
அதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமரின் வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டினார்கள். ஆனால் இன்று அவர்களே மோடியை வரவேற் கிறார்கள் என்றால் திமுகவின் இரட்டை நிலையை மக்கள் புரிந்து புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.