முதல்வர் சென்ற விமானத்தில் குழந்தை அழுததால் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து நேற்று மதியம் விஸ்தாரா விமானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது விமானம் புறப்பட இருந்த நேரத்தில் விமானத்தில் இருந்த 4 மாத குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்துள்ளது. குழந்தையிடம் எவ்வளவோ முயற்சி செய்தும் குழந்தை விடாமல் அழுது உள்ளது. இதனால் அருகில் இருந்த பயணிகள் அவதிக்குள்ளாவர்கள் என்பதால் குழந்தையும் அவருடைய தாயும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளனர். குழந்தையின் தந்தை மட்டுமே விமானத்தில் டெல்லி சென்றுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் மேலாளர் கூறுகையில், “குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் அந்த பயணி விமானத்தை விட்டு இறங்கினார். நாங்களும் அவர்களுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை” என்று கூறியுள்ளார். இதையடுத்து சிறிது நேரம் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.