Categories
மாநில செய்திகள்

முதல்வர் சொன்னதால்…. நம்பிக்கை வந்துட்டு… கண்ணும் கருத்துமாக இயங்கும் பள்ளிக்கல்வித்துறை …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பாலியல் புகார் தொடர்பாக ஏற்கனவே தொடர்ந்து ஆறு,ஏழு மாதமாக….  முதலில் எப்போ சென்னையில் தனியார் பள்ளியில் ஆரம்பித்ததோ அதில் இருந்து ஆங்காங்கே பள்ளிகளில் நடக்கின்றது. நாம் எடுக்கின்ற… மாண்புமிகு முதலமைச்சர் எடுக்கின்ற நடவடிக்கைகள் எந்த அளவிற்கு முனைப்புக் காட்டுவதைபொறுத்து இன்றைக்கு மாணவச் செல்வங்களுக்கு ஒரு நம்பிக்கை வருகிறது என்று தான் நினைக்க வேண்டும்.

துணிந்து மாணவ – மாணவிகள் 1098ஆக இருந்தாலும் சரி பள்ளியில் இருக்கின்ற ஆசிரிய பெருமக்களிடம் அவர்கள் தெரிவிக்கும் போது அதை தயவு செய்து மறைக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். ஏற்கனவே கரூரில் பள்ளி ஆசிரியரே என் மீது தவறான குற்றசாட்டை வைத்து விட்டார்கள், என்னால் இந்த சமூகத்தில் வாழ விரும்பவில்லை என்று தன்னை மாய்த்து கொண்டிருக்கின்றார். இது வந்து கையாளுவதற்கு சிரமமாக இருக்கிறது.

நமக்கு வந்து மாணவ – மாணவியர்கள் ரொம்ப முக்கியம். அதே போல நமக்கு பாடம் சொல்லி கொடுக்கின்ற உண்மையான ஆசிரியர்களும் ரொம்ப முக்கியம், ஏனென்றால் நல்ல ஆசிரியர்கள் இல்லையென்றால் நாம் யாரும் இல்லை. ஆகவே இதை தவறான முறையில் யாரும் பயன்படுத்திவிட கூடாது என்பதில் நாம் கண்ணும் கருத்துமாக இருந்தால் தான் நாம் அதை பண்ண முடியும். நாம் கலந்து ஆலோசித்து உண்மை இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |