Categories
மாநில செய்திகள்

“முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் நினைவு நாள் அன்றுதான்”…. அடித்து சொல்லும் கே.சி.பழனிச்சாமி….!!!!

முன்னாள் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான கே.சி.பழனிச்சாமி 100-க்கும் அதிகமான அதிமுகவினரோடு சென்னை மெரினாவிலுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் நினைவு இடத்தில் நேற்று (டிச. 4) மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளரிடம் கே.சி.பழனிசாமி பேசியதாவது “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் உண்மையான நினைவு தினம் நேற்று தான்.

ஆகவே நேற்று நாங்கள் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினோம். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் ஜெயலலிதா டிச..4ம் தேதி மரணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே தமிழக அரசு மற்றும் மத்திய அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் நினைவு தினத்தை டிசம்பர் 4ம் தேதி என திருத்தம் செய்யவேண்டும்” என அவர் கூறினார்.

Categories

Tech |