மார்ச் 31-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி நோக்கி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 31-ஆம் தேதி டெல்லி நோக்கி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது டெல்லி பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து பேச உள்ளார். அதன் பிறகு ஏப்ரல் 1-ஆம் தேதி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க உள்ளார். துபாயில் பல முதலீட்டாளர்களுடன் சந்திப்பு நடத்திய ஸ்டாலின் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்.