வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு தந்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உள்இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அமர்வு, வன்னியருக்கான 10.5% உள்இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என தீர்ப்பளித்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது பாமகவினரிடையே தமிழக முதலமைச்சர் தம்பி மு.க ஸ்டாலினால் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ஒரே வாரத்திலேயே பெற்றுவிட முடியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்கள் கூட எடுத்துக் கொள்ளட்டும் ஸ்டாலின். இதை செய்து கொடுப்பார் என ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இட ஒதுக்கீட்டுக்கான எந்த போராட்டமும் நடத்தப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.