திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்ததால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜினாமா கடித்தத்தை ஆளுநரிடம் வழங்கியதாக பிப்லப் குமார் தேப் அறிவித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்த நிலையில், இன்றைய தினம் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் பிப்லப் குமார் தேப் வழங்கினார். சட்டம் ஒழுங்கு விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்று முதலமைச்சர் மீது கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து, புதிய முதலமைச்சர் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல், பாஜக சார்பில் திரிபுரா முதலமைச்சராக பிப்லப் குமார் தேப் இருந்து வந்தார்.