Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதல்வர் தொகுதியிலேயே காவல் துறை செயல்பாடு சரியில்லை …!!

முதலமைச்சரின் மாவட்டத்திலேயே கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறிவருவதாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் கோட்டை பகுதியில் இயங்கிவரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் 12 அரசு பள்ளிகளுக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் மதிப்பீட்டிலான மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்கக்கூடிய இருக்கைகளை எஸ்.ஆர். பார்த்திபன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பள்ளி மாணவிகளின் பாதுகாப்புக்காக சேலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில் அரசு அலுவலர்கள், தொழிலதிபர்கள் வீடுகளில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கிறார்கள்” என்றார்.

இதுமட்டுமன்றி சேலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

Categories

Tech |