புதுவை காங்கிரஸ் – திமுக கூட்டணி நாளை பெரும்பான்மையை நிரூபிக்க நிற்கும் நிலையில் அடுத்தடுத்து காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது MLA பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் எதிர்க்கட்சியினரை விட ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி பலம் குறைந்துள்ளது. எதிர்கட்சியினர் பலம் 14 ஆக இருக்கிறது. ஆளுங்கட்சி தரப்பில் இன்றைக்கு காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரும், திமுகவில் இருந்து MLA ஒருவரும் விலகியிருக்கிறார்.
இதனால் காங்கிரஸில் 9 சட்டமன்ற உறுப்பினரும், திமுகவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு இது சென்றால் சபாநாயகர் ஓட்டு போடுவதற்கு தகுதி அற்றவராக இருப்பார். இந்த சூழலில் காங்கிரஸின் பலம் என்பது குறைவாகத்தான் இருக்கிறது. இதனால் அடுத்தடுத்து நடைபெறக் கூடிய விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் பதவி விலகிக் கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போது திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகி இருக்கிறார். அவர் பாஜகவில் சேருவதற்கு வாய்ப்பு கூட இருக்கலாம் என்ற சூழல் தான் இருக்கின்றது. இதனால் புதுச்சேரி அரசு கவிழும் நிலையில் இருக்கின்றது.
நாளை வாக்கெடுப்பு நடைபெறாது என்றும், இன்று இரவே புதுவையின் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்னிடம் முதல்வர் நாராயணசாமி சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என்றும் டெல்லியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் தலைமை வட்டாரம் தெரிவிக்கின்றன.