Categories
மாநில செய்திகள்

முதல்வர் பழனிசாமிக்கு முதலில் கொரோனா தடுப்பூசி… சீமான் அதிரடி…!!!

தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி முதலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளட்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்  கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பூசியை முதலில் போட்டுகொள்ளட்டும், பிறகு மக்களுக்கு போடலாம் என்று சீமான் தெரிவித்துள்ளார். மேலும் எல்லா சட்டங்களையும் எதிர்க்கவில்லை. எதிர்க்கிற மாதிரியே எல்லா சட்டங்களையும் கொண்டு வருகிறார்கள் என கூறிய அவர், ராகுல் எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் மாற்றம் வராது என்று விமர்சித்துள்ளார்.

Categories

Tech |