முதல்வரின் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச் செயலாளர் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா விடுதலை செய்யப்பட்டு தமிழகம் திரும்பியுள்ளார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்று விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது முதல்வரின் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்த திண்டிவனம் நடு குப்பத்தை சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் அய்யாவு என்பவர் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் மூன்று மணி நேரம் காத்திருந்த அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது.