Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் பழனிசாமி எதிர்த்து போட்டியிடும் மிகப் பிரபல நடிகர்… விருப்ப மனு தாக்கல்…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து போட்டியிட நடிகர் இமான் அண்ணாச்சி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாக அதிமுக தமிழகத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்த்து எடப்பாடி தொகுதியில் போட்டியிட நடிகர் இமான் அண்ணாச்சி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட அண்ணா அறிவாலயத்தில் இமான் அண்ணாச்சி விருப்ப மனு அளித்துள்ளார்.

Categories

Tech |