உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் திருப்பூர் மாவட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முக.ஸ்டாலின், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறு குறு தொழில் செய்வோர், ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்,
ஆதரவற்றோர், முதியோர், பெண்கள்,மாற்று திறனாளிகள், திருநங்கையர்கள், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டோர்,புறம் தள்ளப்பட்டோர் ஆகியோரின் மேம்பாட்டிற்காக உழைக்கின்ற இயக்கமான திராவிட முன்னேற்ற கழகத்தில் வாக்குறுதியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இந்த பந்தலுக்குள் வந்து நீங்கள் எல்லாம் கூடி இருக்கிறீர்கள்.
வீட்டுல நான்கு குழந்தைகள் இருந்தால், மெலிந்த குழந்தை மீது தான் பெற்றோருக்கு அன்பு இருக்கும். அதே போல தான் மெலிந்த குழந்தைகளை முன்னேற்றி நடக்கிறேன் என சொன்னார் தலைவர் கலைஞர்.அந்த அடிப்படையில உருவாக்கப்பட்ட திட்டம் தான் நூறு நாட்களில் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிற வாக்குறுதி ஆகும்.
வெற்றி பெற்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட மேடையிலே வாக்குறுதி நிறைவேற்றிய கலைஞருடைய மகன் தான் நான். உங்கள் கோரிக்கைகளை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன். ஆனால் கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற இல்லாதவர் முதல்வர். அதனால தான் ஊரு ஊரா போயி வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டாரு ஸ்டாலின் னு சொல்லிட்டு இருக்காரு.
இப்படி குற்றம் சொல்லுறதுக்கு முன்னால் நாம் எந்த வாக்குறுதி நிறைவேற்றினோம் என முதல்வர் சொல்லணும். அப்படி இருந்தால் தானே சொல்லுவார். ஆட்சி முடிய போகுது, கடைசி நேரத்துல கல்வெட்டுகளை திறந்து வச்சிட்டு இருக்குறாரு முதல்வர்.
ஒரு ஆட்சி தொடங்கும் போது நல்ல திட்டங்களை தொடங்கணும். ஆட்சி முடியறதுக்குள்ள அத திறந்து வைக்கணும். ஆனா முதல்வர் பின்னால் நடந்து போய்ட்டு இருக்காரு. நான்கு ஆண்டு காலம் சும்மா கால ஆட்டிட்டு இருந்துட்டு, ஆட்சி முடியுறப்போ திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுறாரு. ஆட்சி முடியும்போது காத்துல கயிறு திரிகிறார் என தமிழக அரசை முக.ஸ்டாலின் குறை கூறினார்.