முதல்வர் பேசிய போது குறுக்கிட்டதால் பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏ ஆஸ்டின் வெளியேற்றபட்டுள்ளார்.
தமிழக சட்டபேரவையில் இருந்து திமுக எம்எல்ஏ ஆஸ்டின் வெளியேற்றப்பட்டுள்ளார். முதலமைச்சர் பேசிய போது குறுக்கிட்டதால் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசும் போது நான் குறுக்கிடுவதில்லை.
பேரவையில் நாம் பேசும் போது குறுக்கிடுவது தவறு. ஆஸ்டினுக்கு விலாசம் கொடுத்தது அதிமுக என கூறியுள்ளார். இதனையடுத்து ஆஸ்டின் நடந்து கொண்டது போன்ற சம்பவம் தொடராமல் பார்த்து கொள்ள வேண்டும் என திமுகவினருக்கு தனபால் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது.