தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தாராளமாக தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கலாம் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க பலரும் உதவ முன்வந்துள்ளனர்.
அந்தவகையில் விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் தங்களால் இயன்ற நிதி உதவியை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றனர். ஒரு சிலர் மருத்துவ உபகரணங்களையும், ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் அறங்காவலர் ரமேஷ் முதலமைச்சரை சந்தித்து ஐந்து கோடி ரூபாய் காசோலையாகவும், ரூ.5 கோடி அளவுக்கு மருத்துவ உபகரணங்களும் வழங்கி உள்ளார்.