தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு விருப்பமுள்ளவர்கள் தாராளமாக உதவுமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். எனவே பலரும் நிதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நிதியாக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வழங்கியுள்ளனர். மேலும் அந்த கட்சியை சேர்ந்த எம்எல்ஏ, எம்பி க்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் எனவும் அறிவித்துள்ளனர்.