Categories
மாநில செய்திகள்

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு…. இன்று வரை 181 கோடி வந்துள்ளது – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர்.

இதன்படி தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக இன்று வரை 181 கோடி பெறப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. இவற்றில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மேலும் ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூபாய் 60 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |