Categories
மாநில செய்திகள்

முதல்வர் பொது நிவாரண நிதி… புதிய இணையதளம் தொடக்கம்… நிதி அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி என்ற பெயரில் நிதி திரட்டப்பட்டது. இதற்கு ஏராளமான நடிகர், நடிகைகள், நிறுவனங்கள், பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் கூட இதற்கு நிதி வழங்கினார். மேலும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் செய்யப்படும் செலவு கணக்குகள் அனைத்தும் மக்களிடம் தெரிவிக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் பொது நிவாரண நிதிக்காக தனி இணையதளம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எளிதாக நிவாரண நிதியை செலுத்துவதுடன் செலவு குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். மே 6 க்கு முன் வந்த நிதியை தனி கணக்காகவும், மே 7 க்கு பிறகு வந்த நிதியை தனிக் கணக்காகவும் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.472.62 கோடி வந்துள்ளது என்றும், கொரோனா தடுப்பு பணிகளுக்காக இதுவரை ரூ.241 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |