Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு….. உடனே களத்தில் இறங்கிய அமைச்சர் பொன்முடி…..!!!!

கலைஞர் அரங்கம் அமைப்பது தொடர்பாக மாநில கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாநிலக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் பேசும்போது “2000 பேர் அமரக்கூடிய வகையில் நம்முடைய முத்தமிழ் தலைவர் கலைஞர் பெயரால் மாபெரும் அரங்கம் மாநில கல்லூரி வளாகத்தில் அமைக்கப்படும். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய தம்பி உதயநிதியையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களால் இயன்ற அளவு தொகுதி மேம்பாட்டு நிதியை நீங்கள் வழங்கிட வேண்டும் என்று உங்கள் அனைவரின் சார்பில் நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் இங்கே படிக்கின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து அவர்கள் இங்கே வந்து தங்கி படித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு விடுதி கிடையாது. அவர்களுக்கான விடுதி மாநில கல்லூரி வளாகத்தில் அமைத்து தரப்படும். முதற்கட்டமாக இந்த இரண்டு அறிவிப்புகளையும் மாநில கல்லூரியின் கல்வித் தொண்டனாக நான் அறிவிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். முதல்வர் அறிவித்த மறுநாளே கலைஞர் அரங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விடுதி அமைப்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்மொழி மாநில கல்லூரி வளாகத்தில் ஆய்வு செய்தார்.

அப்போது அரங்கம், விடுதி அமைப்பதற்கு தேவைப்படும் இடம், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு அமைச்சர் பொன்முடி நிபுணர்களிடம் கூறியதாவது: “முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகளை துரிதமாக நிறைவேற்றும் விதமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கலைஞர் அரங்கம் அமைப்பது குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன் ஆலோசித்து விரைவில் திட்டப்பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |