Categories
தேசிய செய்திகள்

முதல்வர் முக.ஸ்டாலின் இன்று…. குடியரசு தலைவருடன் சந்திப்பு….!!!!

முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு 2-வது முறையாக டெல்லி சென்றார். டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று சந்திக்க உள்ள அவர், மேகதாது அணை மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினமான ஆகஸ்ட் 7 ஆம் தேதி சட்டப்பேரவையில் அவரது முழு உருவப்படத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுடன், துர்கா ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் என்ற தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |