Categories
மாநில செய்திகள்

முதல்வர் முன்னிலையில்….. இன்று முதல் பள்ளிகளில் தொடங்கிய புதிய திட்டம்…..!!!!

சென்னையில் 100 பள்ளிகளில் சிற்பி எனும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

சென்னையில் பெருகிவரும் குற்ற செயல்களை தடுக்க மாநகர காவல் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறார்கள் நல்வழிப்படுத்துவதற்கு புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை கண்டறிந்து வழி காட்டவும், சென்னையில் சிற்பி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காண்பது அவர்களுக்கு வழிகாட்டுவதே இந்த திட்டத்தின் நோக்கம். முதற்கட்டமாக சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு இந்த திட்டம் செயல்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு முதல் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தனி சீருடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முதலமைச்சரின் முன்னிலையில் மாணவர்கள் சிற்பி திட்டத்திற்கான உறுதி மொழியை ஏற்றனர் .

Categories

Tech |