இன்று பிறந்தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மணல் சிற்பத்தின் மூலம் நெல்லூரை சேர்ந்த ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று 69-ஆவது பிறந்தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த சனத்குமார் என்ற மணல் சிற்பக் கலைஞர் மணல் சிற்பத்தின் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.