Categories
மாநில செய்திகள்

“முதல்வன்” பட பாணியில்…. முதல்வர் மு.க ஸ்டாலின் திடீரென்று ஆய்வு – பரபரப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த நிலையில் முதல் தவணை வழங்கப்பட்டு இரண்டாம் தவணை நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திடீரென்று என்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். ரூபாய் 2000 நிவாரண தொகையை வழங்கும் பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்துள்ளார். முதல்வர் திடீரென்று ஆய்வு செய்ததால் அந்த பகுதி சிறிது நேரம்  பரபரப்பாக காணப்பட்டுள்ளது.

Categories

Tech |