தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றார். இதுகுறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதுகு வலியை பரிசோதனை செய்வதற்காக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது போரூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் பரிசோதனை முடிந்து முதல்வர் உடனடியாக வீடு திரும்பினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.