Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் வீட்டில் திடீர் ஆலோசனை – தமிழக அரசியலில் பரபரப்பு …!!

தேமுதிக – அதிமுக  கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நான்கு கட்டங்களாக முடிந்துள்ளது.  இப்போது ஐந்தாவது கட்டமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் தேமுதிக சார்பில் சுதீஷ், துணை செயலாளர் பார்த்தசாரதி, அவைத் தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளராக மோகன் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கனவே மூன்று கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில் அதில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு 15 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் உறுதிப்படுத்தபட்டுள்ளது. தேமுதிக தரப்பில் தங்களுக்கு பாமகவுக்கு இணையாக தொகுதி ஒதுக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், குறைந்த பட்சம் 20 தொகுதி வழங்க வேண்டும் என சொல்லி இருந்தார்கள். இந்த நிலையில் முதல்வர் வீட்டில் பேச்சுவார்த்தை நடக்கிறது.

Categories

Tech |