Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் வேட்பாளராக டிடிவி…. பரபரக்கும் அரசியல் களம்…. அமமுக அதிரடி தீர்மானம்…!!

சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க இருப்பதால் அரசியல் கட்சிகள் தங்களுடைய பணியை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில்அமமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது .அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் முதன்மையானது என்னவென்றால், “அமமுக எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு தவறான நபர்களின் சுயநலத்தில் சிக்கியிருக்கும் நம்முடைய அதிமுகவை மீட்டெடுத்து தமிழகம் தலைசிறந்து நிமிர்ந்திட செய்வோம்.

தமிழர்களின் வாழ்வு மலர்ந்திட தியாகத் தலைவி சசிகலா அவர்களினால் வாழ்த்துக்களோடு செயல்படும் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களை தமிழக முதல்வர் சிம்மாசனத்தில் அமர வைக்க அயராது உழைப்போம் என்று சூளுரை எடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |