அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இருக்கமுடியும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான கேபி முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளாத கட்சிகள் அதிமுக கூட்டணியில் ஒருபோதும் இருக்க முடியாது”என்று அவர் கூறியுள்ளார்.
அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை கூட்டணி வேட்பாளராக ஏற்பதற்கு பாஜக சற்று தயக்கம் காட்டிக் கொண்டிருக்கும் இந்த கருத்தை கேபி முனுசாமி கூறியுள்ளார்.