முதல்வர் மு.க. ஸ்டாலினின் “உங்களின் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைவர்களுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இபிஎஸ், ஓபிஎஸ், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு திமுக தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் நேரில் சென்று அழைப்பு விடுத்தார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு “உங்களில் ஒருவன்” பாகம்-1 என்ற பெயரில் நூலாக வெளியாக இருக்கிறது.
வரும் 28ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முதல்வர் சுயசரிதையை வெளியிடுவார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் விழாவில், திமுக பொருளாளர் டி ஆர் பாலு முன்னிலை வகிப்பார். அதனை தொடர்ந்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி வரவேற்புரை ஆற்றுவார்.