Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினின் நிவாரண நிதிக்கு…. நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

மேலும் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் மட்டுமல்லாமல் முன் களப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொரோனா களப்பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் முதல்வரின் கொரோனா நிவாரணத்திற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். அதன்படி தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் விக்ரம் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 30 லட்சம் வழங்கியுள்ளார்.

Categories

Tech |