Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினின் 30 நாள் ஆட்சி….. அதிரவைத்த அரசு திட்டங்கள்…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூன் 7-ம் தேதியோடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை அவர் எடுத்த முக்கிய முடிவுகள், தொடங்கிய திட்டங்களை  பார்க்கலாம்.

பதவியேற்ற முதல் நாளிலேயே 5 புதிய திட்டங்களுக்கான 5 கோப்புகளில் கையொப்பமிட்டார். அதன்படி 2.07 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய ஆணை, மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகாண ‘உங்கள் தொகுதியில் முதல்வர் ’ என்ற புதிய துறை உருவாக்கம், தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா நோய்க்கு சிகிச்சை, சிகிச்சைக்கான செலவினத்தை அரசே ஏற்பு ஆகிய 5 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இந்த திட்டங்கள் கொரோனா காலத்தில் பொதுமக்களிடம் கவனம் பெற்றது. அதிலும் கொரோனா நிவாரண நிதி வழங்கும் அதேநேரத்தில் டாஸ்மாக் திறக்கப்படாது என்று உறுதியான நடவடிக்கை அனைத்து தரப்பினரிடம் வரவேற்பைப்பெற்றது. இந்த அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதை பிரதானமாக கருதி, அதற்கான நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தது. கொரோனா குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆலோசனை குழுவை அமைத்து, அனைத்து கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் ஜனநாயக ரீதியான பிரதிநிதித்துவம் தந்துள்ளது.

தமிழக கடன்சுமையால் தவித்த நிலையில், கொரோனா பணிகளுகளை மேற்கொள்வதற்காக, தாராளமாக நிதி வழங்கலாம் என கோரிக்கை வைத்தார். அதன்மூலம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 180 கோடிக்கு மேல் நிதியை திரட்டியுள்ளார். தினசரி கொரோனா ஒருநாள் தொற்று பாதிப்பு குறைப்பதற்கான கடும் முயற்சிகளை மேற்கொண்டதோடு யாரும் எதிர்பாராத வண்ணம், முழு கவச உடை அணிந்து கொரோனா வார்டில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். மத்திய அரசிடம் வலியுறுத்தி 900 டன் ஆக்சிஜன் பெற்று பாற்றாக்குறை இல்லா மாநிலமாக உருவெடுக்க செய்துள்ளார்.

மேலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள் கொரோனாவால் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்பீட்டு தொகை செலுத்தப்படும் என்றும், பட்டப்படிப்பு வரை அவைகளுக்கான கல்விச் செலவையும் அரசு ஏற்கும் எனவும் அறிவித்தார். கொரோனா சூழலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்துள்ளார். ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று கொரோனா நிவாரணம் இரண்டாவது தவணையாக 2 ரூபாய், குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, திருநங்கைகளுக்கும் 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்குவதை தொடங்கி வைத்துள்ளார்.

Categories

Tech |