தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் பிரிட்டனின் ‘the economist’ பத்திரிக்கை தமிழக முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய தலைவரிடம் இல்லாத ஒன்று தமிழக தலைவரிடம் உள்ளது. அது தகுதி, திறன் என குறிப்பிட்டுள்ளது. மேலும் மையத்தில் பாஜக வலுவாக உள்ள நிலையில், காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில், மம்தா,பினராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் மூவரும் மாநில உரிமைகளை நோக்கி ஆட்சியை நகர்த்துவதாக கூறியுள்ளது.