Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் கான்வாய்-ஐ….. தெறிக்கவிட்ட பைக் திருடன்…. பரபரப்பு சம்பவம்….!!!!

முதல்வர் முக ஸ்டாலின் கான்வாய் பாதுகாப்புடன் சென்னை காமராஜர் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆக்டிவா பைக் ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த இளைஞர் ஒருவர் அத்துமீறி குறுக்கே நுழைந்தார். வண்டியில் நம்பர் பிளேட் இல்லாததால் உடனே காவல்துறையினர் இளைஞரை அலேக்காக தூக்கிக்கொண்டு போய் விசாரணை செய்தனர். அப்போது அவர் கேகே நகரை சேர்ந்த அஜித் என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |