மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவினால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும் அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் நுரையீரல் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர் பரிசோதனைக்காகவும் சிகிச்சைக்காகவும் அதே மருத்துவமனைக்கு மீண்டும் தற்போது அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் l. இந்த நிலையில் தன்னுடைய தாயார் தயாளு அம்மாளின் உடல் நிலை குறித்து மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் முதல்வர் மு க ஸ்டாலின் கேட்டறிந்தார்.