செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் கராத்தே தியாகராஜன், தேர்தல் அறிவிப்பு வந்த மறு நாளிலேயே நாமினேஷன் ஆரம்பித்து விடுவார்கள். அந்த மாதிரி நடத்தக்கூடாது. குறைந்தபட்சம் 15 நாட்கள் நேரம் கொடுக்க வேண்டும் நாமினேசன் ஆரம்பிப்பதற்கு, இவர்கள் என்ன செய்வார்கள் ? மாநில தேர்தல் ஆணையம், நேரு அவர்களின் கட்டுப்பாட்டிலும், முதல்வர் அவர்கள் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. எது கேட்டாலும் ? அரசு நேத்து தான் கலெக்டர்ஸ் மீட்டிங் போட்டுள்ளார்கள்.
ஜனவரி 31 வரைக்கும் டைம் இருக்கு நமக்கு, இரண்டு நாளில் நோட்டிபிகேஷன் அறிவித்து 4 நாளில் நாமினேஷன் ஆரம்பிக்க கூடாது, அது வந்து ஜனநாயகத்தில் தவறு, 10 அல்லது 15 நாள் டைம் கொடுக்க வேண்டும். 2019 ஜி.ஒ. படிதான் தேர்தல் நடக்கிறது. அதிமுக அரசு போட்ட ஜிஒ படிதான் தேர்தல் நடக்கிறது, புதுசாக சுப்ரீம் கோர்ட் கொடுக்கவில்லை. அதனால் அதை நம்மால் மாற்ற முடியாது. ஆகவே அந்த ஜி.ஒ படி தான் தேர்தல் நடக்கிறது.
நாங்கள் முறையாக தேர்தல் நடக்கவில்லை என்றால், நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம். தேர்தலை முறையாக நடத்துவார் ஆணையர் என்று நம்பிக்கையுடன், காவல்துறையினரும், ஆணையரும் முறையாக இந்த தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்துவார்கள். முதலமைச்சர் அறிவாலயத்தில் பேசினதில் சந்தேகம் இருக்கிறது. 100% வெற்றி எப்படி சாத்தியமாக இருக்கும், அது முடியவே முடியாது.
இவர்கள் நினைக்கின்ற மாதிரி தேர்தல் நடத்த விட மாட்டோம், நாங்கள் மாநகராட்சி ஆணையரும், காவல்துறை ஆணையர் இந்த தேர்தலை நியாயமாக நடத்துவார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனென்றால் தேர்தலில் என்னென்ன அவர்கள் பண்ணுவார்கள் என்று தெரியும் அதற்கான மனுவை வந்து மாநில துணைத் தலைவர் துரைசாமி தலைமையில், கருணாகரன் நாங்க எல்லாரும் கொடுக்கப் போறோம் என தெரிவித்தார்.