Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் பாணியில்…. ஆக்சனில் இறங்கிய டி.ஜி.பி சைலேந்திர பாபு…. டென்ஷனில் போலீசார்….!!!!

தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு காவல்துறைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

தமிழ்நாட்டின் முதல்வராக மு.க ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பிறகு தமிழக டி.ஜி.பியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இவர் மிகவும் எளிமையான மற்றும் நேர்மையான மனிதர் ஆவார். இவர் காவல்துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு சட்டம்-ஒழுங்கை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கொடுக்கும் புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து டி.ஜி.பி சைலேந்திரபாபு செங்கல்பட்டு காவல்துறைக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு குற்றங்கள் நடப்பதற்கு முன்பாக நடவடிக்கை எடுத்த மாமல்லபுரம் ஆய்வாளர் மணிமாறனை பாராட்டி ரொக்கப்பரிசு வழங்கினார். இதேப்போன்று டி.ஜி.பி சைலேந்திரபாபு கானத்தூர் காவல்நிலையத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சட்டம்-ஒழுங்கை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களின் குறைகளை உடனடியாக களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

இதனையடுத்து காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு முறையாக வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார். இதன்பிறகு சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு ரொக்கப்பணம் அளித்து காவலர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனையடுத்து தர்மபுரி மாவட்டம் அதியமான் காவல்நிலையத்திற்கும் திடீரென ஆய்வு பணிக்காக டி.ஜி.பி சைலேந்திரபாபு சென்றார். அங்கு நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இவரின் நடவடிக்கைகளை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் டி.ஜி.பி சைலேந்திரபாபு எந்த காவல்நிலையத்திற்கு எப்போது செல்வார் என்று தெரியாமல் போலீசார் மிகுந்த பதற்றத்தில் இருக்கிறார்கள்.

Categories

Tech |