தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகின்றார்.அதற்காக வாகன போக்குவரத்தை இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் உடுமலை வழியாக வாகனங்கள் செல்வதற்கு மாற்று பாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . பல்லடத்தில் இருந்து பணப்பாளையம், தாராபுரம் ரோடு பிரிவு, வடுக பாளையம் பிரிவு, சித்தம்பலம் பிரிவு, கள்ளக் கிணறு பிரிவு, தண்ணீர் பந்தல், முத்தூர் மற்றும் குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக பொள்ளாச்சி செல்ல வேண்டும்.
அவ்வாறு பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் காமநாயக்கன்பாளையம் நால்ரோடு, மல்லகவுண்டம்பாளையம், அய்யம்பாளையம், செட்டிபாளையம் ரோடு பிரிவு வழியாக பல்லடம் வர வேண்டும்.கோவை செல்லும் வாகனங்கள் கரடி வாயிலிருந்து காரணம்பேட்டை வழியாக கோவை செல்ல வேண்டும். உடுமலையிலிருந்து பல்லடம் நோக்கி வரும் வாகனங்களும் மேற்கண்ட பிரிவு வழியாக செல்ல வேண்டும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.