முதல்வர் முக ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவல் கட்டுப்பாட்டு துறையை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் சென்னையிலுள்ள முதல்வர் மு க ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து முதல்வர் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்ததில் மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.