Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு…. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் தெரியுமா?… போலீஸ் வெளியிட்ட தகவல்…!!!!

தமிழகத்தில் அடிக்கடி பிரபலங்கள் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன்கால் வருவதும், இந்த தகவலை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் யார் என்பது தெரியவந்துள்ளது. விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் என்ற 25 வயது இளைஞர் ஒருவர் இதை செய்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட அவர் வேறு ஒருவரின் போனை வாங்கி வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த தினத்தன்று போலீசார் மேற்கொண்ட சோதனையில் எந்த வெடிப்பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

Categories

Tech |