தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 1-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று மதுரையில் தொடங்கி வைத்தார். அப்போது குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்திய முதல்வர் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டார். நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டை துவக்க பள்ளியில் இன்று காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்பி ராஜேஷ் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இவர்கள் குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர். அப்போது எம்.பி ராஜேஷ்குமார் ஒரு குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டார். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் 50 பள்ளிகளைச் சேர்ந்த 2856 மாணவ-மாணவிகள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.