கடந்த ஆண்டை விட சென்னையில் கொரோனா வேகமாக பரவிவருகிறது. எனவே பொதுமக்கள் அத்தியாசிய தேவைகளுக்கு தவிர்த்து மற்றவைகளுக்கு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
ஐசிஎம்ஆர் தமிழகப் பிரிவின் துணை இயக்குநராக பதவி வகிப்பவர் பிரதீப் கவுர். இவர் தமிழக அரசு கொரோனா தொற்று தொடர்பான ஆலோசனைக் குழுவிற்கு அவ்வப்போது தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதுமட்டுமின்றி தினந்தோறும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு தகவல்களையம், மருத்துவ அறிவுரைகளையும் அவ்வப்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இவர் தமிழக அரசு கொரோனா தொற்று தொடர்பாக தெரிவித்துள்ளதாவது:-
முதல் அலையில் பதிவான எண்ணிக்கையைவிட சென்னையில் இன்று அதிக தொற்று பதிவாகியுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டை விட சென்னையில் கொரோனா வேகமாக பரவிவருகிறது. கடந்த ஜுன் மாதம் இறுதியில் 2 வார ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்புதான் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது.
தற்போது உள்ள நிலையில் வரும் தொற்று பாதிப்பு உயரும். தடுப்பு நடவடிக்கை தீவிரபடுத்தினாலும் தொற்று குறைய 14 நாட்கள் வரை ஆகும். எனவே பொதுமக்கள் அத்தியாசிய தேவைகளுக்கு தவிர்த்து மற்றவைகளுக்கு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.