தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு யாரேனும் பிரச்சனையோ அல்லது தொந்தரவு கொடுத்தால் ‘முதல் ஆளாக நான் அதை எதிர்த்து நிற்பேன் ‘என்று படத்தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் இயக்குனருமான பாரதிராஜா எச்சரித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் படத்தயாரிப்பாளர் சங்கங்கள் புற்றீசல்களை போல உருவாகியிருப்பது துரதிஷ்டமாக உள்ளது என்று குறிப்பிட்டார். இதுபோல மற்ற மாநிலங்களில் இல்லை என்று வேதனை தெரிவித்தார். தலைமை பொறுப்புகளில் இருக்கும் தலைவர்களின் புரிதலால் ஏற்படும் குழப்பமே இதற்கு காரணம் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். எனவே பழைய சங்க உறுப்பினர்கள் காலத்தின் மாற்றங்களை உணர்ந்து தங்கள் கொள்கைகளை கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் மற்ற ‘சங்கங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்’, என்று பாரதிராஜா வலியுறுத்தினார். இதற்குப் பதிலாக மற்ற சங்கங்களில் உள்ள ‘உறுப்பினர்களை அடக்கி ஆள்வது திரைப்படத் துறையை நிர்மூலமாக மாற்றிவிடும்’ என்று வேதனையில் தெரிவித்தார்.
உதாரணமாக டிஎப்பிசி நிறுவனம் பல முறையற்ற சீர்கேடான பணிகளை செய்து வருகிறது என்றும் இதற்கு முன் இருந்து டிஎப்பிசி நிறுவனமானது இரண்டு விதமான சங்கங்களுடனும் இணைந்து தயாரிப்பாளர்களுக்கு பணிபுரிந்து வந்தது. டிஎப்பிசி எப்போதுமே தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு’ தாய் சங்கமாக’ இருக்கும் .எனவே டிஎப்ஏபிஏ உறுப்பினர்களை தனித்தனியாக மிரட்டல் விடுத்தும் ,அவர்களின் படங்களுக்கு இடையூறு செய்வதாகவும் அறிந்து கொண்டேன். இவ்வாறு நடைபெற்றால் டிபிஎப்சி பிரிவுகளாக பிரியும் என்றும் அவ்வாறு நடந்தால் அதற்கு புதிய நிர்வாகமே காரணமாக அமையும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.