ஐபிஎல் 15ஆவது சீசன் ( 26/03/2022) தொடங்கி நடைபெற்று வருகின்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரவீந்தர் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய உமேஷ் யாதவ் சென்னை ரசிகர்களுக்கு அதிர்சியளித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 4ஆவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.