தனது முதல் திருமண நாளை கணவருடன் சேர்ந்து கொண்டாட சென்ற இளம்பெண் சாலை விபத்தில் பலியான சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் வசிப்பவர்கள் சதிஷ்-அஞ்சு தேவ்(26) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது. இந்நிலையில் தங்களது முதல் திருமண நாள் வந்ததால் அதை கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தனர். சில மாதங்களாக தன் பெற்றோருடன் வசித்து வந்த அஞ்சு தனது திருமண நாளை கொண்டாட கணவர் வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார். எனவே தனது பெற்றோருடன் காரில் கணவர் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த லாரி, காரின் மேல் திடீரென மோதியதால் அஞ்சு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் அவருடன் காரில் சென்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். வெகு நேரமாகியும் தனது மனைவி வீட்டிற்க்கு வரவில்லையென யோசித்து கொண்டிருந்த சதிஷ்க்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் காவல்துறையினர் அஞ்சு விபத்தில் உயிரிழந்ததாக கூறியதால் அவர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அஞ்சுவின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து சம்மந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.