இந்திய அணியின் நட்சத்திரவீரர் விராட் கோலி ஆவார். இவர் சென்ற 3 வருடங்களாக சதம் அடிக்காமல் பல விமர்சனங்களுக்கு தள்ளப்பட்டார். இதனால் அவருக்கு பல டி20 தொடர்களில் ஓய்வும் வழங்கப்பட்டது. கிரிக்கெட்டில் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் சமூகவலைதளங்களில் விராட்கோலி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். களத்தில் சாதனைகளை முறியடித்ததோடு, அண்மையில் 50 மில்லியன் டுவிட்டர் பின் தொடர்பவர்களைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட்கோலி பெற்றார். இதேபோன்று இன்ஸ்டாகிராமில் விராட்கோலியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.
அத்துடன் அதிக பாலோவர்கள் கொண்ட விளையாட்டு வீரர்கள் வரிசையில் 211 மில்லியன் பாலோவர்களுடன் விராட்கோலி 3வது இடத்தை பிடித்து இருக்கிறார். கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ (476 மில்லியன்) முதல் இடத்திலும், லியோனல் மெஸ்ஸி (356 மில்லியன்) 2-வது இடத்திலும் இருக்கின்றனர். விராட்கோலிக்கு 49 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக்ரசிகர்கள் இருக்கின்றனர். சமூகஊடகங்களில் அவரைப் பின் தொடர்பவர்களின் மொத்த எண்ணிக்கையானது 310 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கிறது. 2 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் விராட்கோலி 2022 ஆசிய கோப்பையின்போது ஃபார்முக்கு திரும்பினார். ஆசியகோப்பைக்கு முன் ஒரு மாதமாக தன் பேட்டை தொடவில்லை என கோலி தெரிவித்திருந்தார்.