இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டியானது இன்று நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக இத்தொடரில் தன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறுகிறது. முன்பாக உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரிஷப்பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இரண்டு பேருமே இடம் பிடித்துள்ளதால் 11 பேர் அணியில் விளையாடப் போவது யார் என்ற மிகப்பெரிய விவாதம் இந்திய வட்டாரத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் முதல் டி20 போட்டியில் களம் இறங்கும் தனது சிறந்த 11 பேர் இந்திய அணியை முன்னாள் இந்தியவீரர் வாசிம் ஜாபர் வெளியிட்டுள்ளார்.
அவற்றில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக்கை முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ள அவர், ரிஷப் பண்ட்டை கழற்றி விட்டுள்ளார். இதற்கு முன்னதாக ராகுலுடன் ரிஷப்பண்ட் தொடக்க வீரராக களம் இறங்குவதை பார்க்க விரும்புவதாக தெரிவித்திருந்த வாசிம் ஜாபர் இந்த அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது ரசிகர்களைத் திரும்பிப்பார்க்க வைக்கிறது. அவருடைய 11 பேர் உடைய இந்திய அணி : கேஎல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, சஹால் போன்றோர் இடம்பிடித்துள்ளனர்.