Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டெஸ்ட் போட்டி: அணியில் இடம்பெற கடும் போட்டி…!!

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற முக்கிய வீரர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து – இந்தியா கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து நேரடியாக சென்னை வந்தது. இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, பாண்டியா, கேஎல் ராகுல், புஜாரா இடம்பெறுகின்றனர். பும்ரா, இஷாந்த் சர்மா, ஷர்துல் தாகூர், அஸ்வின்,சிராஜ் ஆகியோர் இடையே அணியில் இடம் பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குல்தீப் யாதவ், வாஷிங்க்டன் சுந்தர் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |