Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முதல் டெஸ்ட்….. “மிரட்டல் பவுலிங்”…. 35 ரன்கள் இலக்கு…. சேஸ் செய்து ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி..!!

முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி..

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா அணி. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க பேட்டர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டனர். வேகபந்து வீச்சுக்கு சாதகமான உள்ள அந்த ஆடுகளத்தில் பேட்டர்கள் திணறியதால் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 48.2 ஓவரில் 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கைல் வெர்ரின்னே 44 ரன்களும், டெம்பா பவுமா 30 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன்  தலா 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலன்ட்  தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.. பின்னர் முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் தென்னாப்பிரிக்க பவுலர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தொடக்கத்தில் சற்று தடுமாறியது. 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில் அந்த அணியில் டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார். நேற்று ஆஸ்திரேலியா அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்க்சில் 33.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்த நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது..

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 50.3 ஓவரில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டிராவிஸ் 92 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களும் எடுத்திருந்தனர். இதையடுத்து 2ஆவது இன்னிங்க்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி மீண்டும் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலன்ட்  ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.. பின் எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டில் இழந்து 35 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் டெஸ்ட் போட்டி இரண்டாவது நாளிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.

 

Categories

Tech |