Categories
மாநில செய்திகள்

முதல் டோஸ் தடுப்பூசி போட்டால்…. 75% நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிடும் – மா.சுப்பிரமணியன்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். மேலும் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இந்நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டுகொண்டால் 75% நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிடும். எனவே முதல் டோஸ் போட்டவர்கள் பயமில்லாமல் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |