Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முதல் தலைமுறை தொழில் முனைவோர்…. “மானிய தொகை 75 லட்சமாக உயர்வு”…. ஆட்சியர் தகவல்…!!!!!!

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மானியத்தொகை 75 லட்சம் ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, படித்த தொழில் தொடங்க விருப்பம் இருக்கும் முதல் தலைமுறையினர் பயன்பெறும் வகையில் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தில் தமிழக அரசு 5 கோடி வரையிலான திட்ட முதலீட்டிற்கு 25 சதவீதம் அதிகபட்ச மானியமாக 50,000 லட்சம் வரை வழங்கியிருந்த நிலையில் தற்போது 50 லட்சத்தில் இருந்து 75 லட்சம் ஆக உயர்த்தி இருக்கின்றது.

இதற்கு விண்ணப்பிப்போர் தொழில்கல்வி, பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, ஐடிஐ படித்து தேர்வு பெற்ற மகளிர் மற்றும் பொது பிரிவினர் அல்லாதவர்கள் 21 வயது முதல் 45 வயது வரையிலும் பொது பிரிவினராக இருந்தால் 21 வயது முதல் 35 வயது வரை இருப்பவர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை வேளாண்மை துறை இணை இயக்குனர் அலுவலகம் அருகே இருக்கும் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகலாம் என கூறப்பட்டிருக்கின்றது.

Categories

Tech |