திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் அமைச்சராக பொறுப்பேற்றார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் பள்ளி நாட்களில் P.E.T. பீரியட் நேரத்தில் வேறு வகுப்புகள் எடுப்பதை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, கட்டாயம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் “மினி ஸ்டேடியம்” அமைப்பது தான் முதன்மையான பணி எனவும் தெரிவித்தார்.